பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு

Want create site? Find Free WordPress Themes and plugins.

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : ஜூன்-14

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பொது மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திப் பயனடையுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts