பெருங்களத்தூரில் ஆயிரத்து 338 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை பெருங்களத்தூரில் தனிபடை போலீசார் நடத்திய வாகன சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 338 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அடுத்த பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை மற்றும் பீர்க்கன்காரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மினி லோடு வேன்களை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 338 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு மினி லோடு வேன்களை பறிமுதல் செய்த போலீசார், வேன் ஓட்டுனர்களான பிரகாஷ் , நூர் முகமது மற்றும் பவுன் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts