பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளனர்

பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளனர் என்று ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.. இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி அமைத்து  தேசிய பசுமை தீர்ப்பாயம்  உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்த அந்த ஆய்வுக்குழு, தாமிர கழிவுகள் கொட்டப்பட்டுள்ள உப்பாற்று ஓடை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாக ஆலையின் உள்ளே சென்று ஆய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுதொழில் நுட்ப கல்லூரிக்கு வல்லுநர் குழு சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டது, மக்கள் அளித்த மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீதிபதி தருண் அகர்வால், மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார் தேவைப்பாட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறினார்.

தூத்துக்குடியில் ஆய்வை முடித்தப்பின் ஆய்வுக்குழு நாளை சென்னை திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts