பெற்றோரிடம் இருந்து தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்: சி பி சி ஐ டி ஆய்வாளர்   மகள்   கோரிக்கை 

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றும் தனது தாயும், தந்தையும் தன்னை வற்புறுத்தி துபாயில் உள்ள ஒரு பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்தாகவும், தனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவர்களிடம் இருந்து விலகி  அண்ணன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறினார்.  .இந்நிலையில், கடந்து 23-ந் தேதி  தனது பெற்றோர் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றதாகவும் இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகவும் அவர் தெரிவித்தார்.  மேலும் தனது அண்ணனின் கடையை  அபகரிக்க முயற்சி செய்கின்றனர் எனவும், தனது அண்ணன் மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வாங்கி வருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர்எனவும் அவர் குற்றம்சாட்டினார். தனது தாயார்  காவல் ஆய்வாளராக இருப்பதால் அவர் மீது எந்த, புகார் அளித்தாலும்காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும்,  தனது அண்ணனின் குடும்பத்தாருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts