பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருவள்ளூர்  தெற்கு மாவட்ட  தி.மு.க. துணைச் செயலாளர் காயத்திரி ஸ்ரீராமின் மகள் நிதர்சனா மற்றும் பூந்தமல்லியைச்சேர்ந்த மைக் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர்.

நிதர்சனாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று காலை இருவரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே நிதர்சனாவை காணவில்லை என்று அவரது தாயார் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி காவல்நிலைய காவலர்கள் நிதர்சனாவை அழைத்துச் செல்ல திருப்பரங்குன்றம் வந்துள்ளனர்.

சென்னை சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக் கூறி அவர்களுடன்  செல்ல மாட்டோம் என்று இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பினருடனும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts