பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் பிரதானமாக இடம்பெறாது : சீனா

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அடுத்த மாதம் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில், காஷ்மீர் விவகாரம் பிரதானமாக இடம்பெறாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யங், ‘பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான அதிகாரபூர்வமற்ற சந்திப்பு அடுத்த மாதம் நடக்கிறது என கூறியுள்ளார். ஆனால் தேதி, இடம் குறித்து இப்போது கூற இயலாது என குறிப்பிட்ட அவர், இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் பேசப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார். இரு தலைவர்களுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் முக்கிய விஷயமாகப் பேசப்படாது என நம்புவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

Related Posts