பேனர் நிறுவினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

உயர் நீதிமன்றம்  மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும்  5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் கலாசாரத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் , மேலும் அரசியல் கட்சியினருக்ம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி நெடுஞ்சாலை மற்றும் நடைபாதைகளில் வைக்கும் பொருட்டு டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அவசர, அவசரமாக அகற்றப்பட்டு வருகின்றன.

Related Posts