பேனர் விழுந்து உயிரிழந்ததற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

சுபஸ்ரீ, ரகு ஆகியோர் பேனர் விழுந்து உயிரிழந்ததற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பேனர் விபத்துகள் நடப்பதற்கு பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறியுள்ளார். தவறைக் சுட்டிக்காட்டினால் நாக்கை அறுப்பேன் என்பதும், ஏறி மிதிப்பேன் என மிரட்டுவதும் அவர்களின் அரசியல் நாகரீகமாக இருப்பதாக கூறியுள்ளார். அச்சப்படாமல் அனைவரும் அரசின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts