பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ கனடா செல்வதற்கு எழுதிய தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ, கனடா செல்வதற்கு எழுதிய தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வந்த சுபஸ்ரீ, கடந்த 12 ஆம் தேதி கனடா நாட்டுக்கு செல்வதற்கான தேர்வை எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதிமுக பிரமுகர் சாலையின் குறுக்கே அனுமதியின்றி வைத்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததில், நிலைதடுமாறிய அவர் மீது லாரி மோதிதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர நிகழ்வு தமிழகம் முழுவதும் பேனருக்கு எதிராக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் வைத்த நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சுபஸ்ரீ கனடா செல்வதற்கு எழுதிய ஐ.இ.எல்.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கனவு வேலைக்கு தேர்வு எழுதிவிட்டு திரும்பிய சுபஸ்ரீ, தற்போது அனைவரது நினைவிலும் நின்று அவரது தேர்வு முடிவை பார்த்துக்கொண்டிருப்பது நீங்கா வலியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts