பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்

தமிழகத்தில் பேனர் வைப்பதை  வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம்  மாவட்டம் அயப்பன்தாங்கல் ஊராட்சியில் திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு, செய்திளார்களுக்க பேட்டியளித்தார். அப்போது, பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த  சட்டப்பேரவையில்  சட்டம் கொண்டு வர  திமுக சார்பில் அழுத்தம் தரப்படும் என்றார்.

மேலும், பல்வேறு நிறுவங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதை சுட்டிகாட்டிய அவர், இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே என்று குற்றம்சாட்டினார்.

Related Posts