பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாடு குறித்து மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

வரும் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாடு குறித்து மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்

மாநாடு நடைபெறவுள்ள நந்தனம் ஒய்.எம்.சி மைதானத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிடம் நிர்வாகிகள் நிதியளித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சுப்பரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்ட அவை தலைவர்கள் இளவழகன், மலையாளன், பொருளார் பீடா ரவி, குணசேகரன், மாநில மாணவரணி நிர்வாகி சேஷன் மற்றும் பகுதி செயலாளர்கள் தங்கதுரை, சைதை குமார், செல்லபாண்டியன், சின்னவன் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Posts