பேரறிஞர் அண்ணாவின் 111 -வது பிறந்த நாள் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் : வைகோ

Want create site? Find Free WordPress Themes and plugins.

செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 111 -வது பிறந்த நாள் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கட்சியினரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மாவட்டக் கழககூட்டங்கள், ஒன்றிய, நகர கழக கூட்டங்கள் நடத்தி மாநாட்டு பணிகளை துரிதப்படுத்துமாறு கட்யினரை அறிவுறுத்தியுள்ளார்.

கழகம் நடத்துகிற இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெற இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டுக்கான வாகன ஏற்பாடுகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நகரம், ஒன்றியம் வாரியாக ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் பற்றிய விவரங்கள், வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts