பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்: ஓ.பன்னீர்செல்வம் 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் எனவும் இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது வழியிலான தற்போதைய அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து வருவதோடு, கூடுதல் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும்,  நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நடக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும்,  இது குறித்து தமிழக ஆளுநரை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருவதாகவும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Posts