பேராசிரியை நிர்மலாதேவியுடன் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு

பேராசிரியை நிர்மலாதேவியுடன் மேலும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை : மே-03

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில், கைது செய்யப்பட்டுள்ள காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும்ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் 2 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களை விசாரணைக்கு அழைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா தேவியுடனான தொடர்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Related Posts