பேரிடர் நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும் : ஆர்.பி. உதயக்குமார்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீடு மற்றும் பேரிடர் நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கஜா புயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலும் 24 நடமாடும் மருத்துவக்குழுக்களை அனுப்பிவைத்தார். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  மீட்பு பணி முழு வீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும்,  ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்கை திரும்பும் எனவும் தெரிவித்தார். முதன் கட்டமாக மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், காப்பீடு மற்றும் பேரிடர்   நிவாரண நிதி ஆகிய இரண்டும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts