பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

           கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் சுகாதார துறை சார்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என தெரிவித்தார். அரவக்குறிச்சி தொகுதியில் அரசு எந்த வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரம் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாக கூறினார். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது என்ன திட்டங்களை செய்தார் என கேள்வி எழுப்பிய அவர், தனது கடின உழைப்பிற்காக ஜெயலலிதா, அமைச்சர் பொறுப்பை கொடுத்ததாக கூறினார்.

Related Posts