பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : வங்கி ஊழியர்கள் போராட்டம்

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில்,பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என கூறினார்.  இதனால் வங்கிகளில்  கடன்களை  விரைந்து  வழங்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின்  வாராக்கடன்  7  லடசத்து  90  ஆயிரம்  கோடியாக  குறைந்துள்ளதாக  அவர்  தெரிவித்தார்.  8  வங்கிகள்  வட்டி  விகிதங்களை குறைத்துள்ளதாகவும், 18  பொதுத்துறை  வங்கிகளில்  14  வங்கிகள்  லாபத்தில்  இயங்குவதாகவும்  அவர்  கூறினார்.

இந்நிலையில்,  வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.

தங்களுக்கு மெகா வங்கிகள் மற்றும் மெகா இணைப்புகள் தேவையில்லை எனவும் வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

வங்கிகள் இணைப்பு அறிப்பை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Posts