பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்களின் இடை நிற்றல் இருக்காது

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்களின் இடை நிற்றல் இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது செய்திளார்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 8 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் ரீதியில் முன்னேற்றம் பெறுவதற்கு ஏதுவாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதிகள் முழுமையாக அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் இருமொழி கொள்கையே நிலைத்து நிற்க்கும் என்றார். மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், இருமொழிக் கொள்கை என்பது எங்களின் இன்று நேற்று நாளை என்ற வகையில் இருக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் , முனைவர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக 1000 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

 

Related Posts