பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேனர் விவகாரத்தில் பொதுமக்களும், பிளக்ஸ் பேனர் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதித்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மத்திய அரசு விவசாயிகளுக்கான நகைக்கடன் சலுகையை ரத்து செய்யக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட மேலிட பார்வையாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

Related Posts