பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிச்சென்று குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது-எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிச்சென்று குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களின் குறைகளை, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நிவர்த்தி செய்யும், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், சிறப்பு குறை தீர் திட்டபடி, அலுவல் குழுவினர் நேரடியாக பொதுமக்களிடம் சென்று மனுக்களை பெற்று, விரைவில் தீர்வு காண்பார்கள் என்றார். மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதால் தான் ஆட்சியில் வீரநடைபோட்டு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

சேலம் பெரிய சோரகை பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.  இது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை நிவர்த்தி செய்யும் திட்டம் என்றும், இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் உள்ள வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேரில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் விவசாயிகளின் குறைகளை தீர்க்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிலும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

Related Posts