பொது விநியோகத் துறை என்பது மிகவும் வலிமையாக உள்ளது

தமிழகத்தில் பொது விநியோகத் துறை என்பது மிகவும் வலிமையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள், அரசு சார்பில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொது விநியோகத் துறை மிகவும் வலிமையாக உள்ளது என்றார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வந்தாலும், தமிழக மக்கள் இப்போது என்னென்ன ரேஷன் பொருட்களை வாங்குகிறார்களோ, அதே பொருட்கள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று அவர் கூறினார். அதே நேரம் வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து ரேஷன் பொருள் வாங்குவோருக்கு விலையில்லா அரிசி வழங்கப்படாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Posts