பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான இருவர் கைது 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18-ம் தேதி ஒரு சமுதாயத்தினரை இழிவு படுத்தும் விதமாக மற்றொரு சமுதாயத்தினர் வாட்ஸ் ஆப்பில் தகவலை பரப்பினர். இது தொடர்பாக புகார் மனு மீது பொன்னமராவதி காவல் நிலையம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை உறுதி அளித்த்து. இதையடுத்து போராட்டமானது விளக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் கடந்த 19-ம் தேதி காலையில் இருந்து இந்த போராட்டமானது வலுத்தது. இந்த போராட்டமானது புதுக்கோட்டை பொன்னமராவதி மற்றும் இல்லாமல் அதனை தாண்டி சிவகங்கை மாவட்டம், மதுரை மாவட்டம் வரை நீட்டித்தது.

இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வவகுமாரை சென்னை வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts