பொன்னமராவதி மோதல் தொடர்பாக ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு 

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே, அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஒரு சமுதாயத்தைச் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் 13 பேர் காயமடைந்தனர்.

மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள சில கடைகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பொன்னமராவதி மோதல் தொடர்பாக ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Related Posts