பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்: தொல்.திருமாவளவன் 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், மக்களவைத்  தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக  தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாகவும் கூறினார்.  நடைபெற உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதி  இடைதேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சாரம் செய்யும் எனவும்  நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் கூறினார். .  கிறிஸ்த்துவ மக்களுக்கு ஈஸ்தர் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்த அவர், பொன்பரப்பியில் நடந்த வன்முறையில் பாமக மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு  தொடர்பு உள்ளதாகவும்  பெயர்களை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பொன்பரப்பியில் மறு வாக்கு பதிவு  நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளதாகவும் பல மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை வீசுவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.  .

Related Posts