பொருப்பேற்ற பின் காவல் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படும் சம்பவங்கள் நடைபெறவில்லை: அசுதோஷ் சுக்லா 

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளின்  ஆய்வுக்கூட்டம் தமிழக தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்கு எண்ணும் மையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார், வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடைமையை ஆற்ற முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். காவல் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தாம் பொறுப்பேற்ற பின்னர் பணம் கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்பு பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற தகவல் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Related Posts