பொருளாதாரத்தில் தோல்வி கண்டு பாஜக,  ராணுவத்தின் துணிச்சலுக்குப் பின் ஒளிந்துயுள்ளக்து: மன்மோகன் சிங்

டெல்லியில் பேட்டியளித்த மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பலமுறை எதிரிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதைத் தேர்தல் ஆதாயத்துக்கு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை எனவும் தெரிவித்தார்.

பொருளாதாரக் கொள்கைகளில் தோல்வியடைந்த பாஜக அரசு, அதை மறைக்க ராணுவத்தின் துணிச்சலுக்குப் பின் ஒளிந்துகொள்வதாகவும் மன்மோகன் விமர்சித்தார். இது வெட்கக் கேடானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் நிகழ்ந்த 14நாட்களுக்குள் லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

Related Posts