பொருளாதார தேக்கநிலை காரணமாக கோவையில் இயங்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை காரணமாக கோவையில் இயங்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாகன உதிரி பாகங்கள், மோட்டார் பம்ப் செட்டுகள், கிரைண்டர்கள், தங்க நகைகள் ஆகியவற்றை தயாரிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோவையில் அதிகம் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஜி.எஸ்.டி.யால் வருவாயை இழந்த நிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர் மந்தநிலை காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி வருவாய் 500 கோடி ரூபாய் அளவுக்கு தேக்கம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர ஊதியம் தர முடியாததால் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி வருவதாக கூறும் சிறு, குறு தொழி்ல் உற்பத்தியாளர்கள் அரசு உடனடியாக வரிச்சலுகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், தங்கத்தின் மீதான கூடுதல் வரி விதிப்பை விலக்கிக்கொள்ள அரசு முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts