பொருளாதார மந்தநிலை காரணமாக 60 சதவிகிதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள்

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திருப்பூரில் 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் பின்னலாடை ஏற்றுமதியின் மூலம் 26 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது. தற்போதைய பொருளாதார மந்த நிலை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருந்த பனியன் நிறுவனங்கள் தற்போது 12 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. திருப்பூரில் சமீப நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை சுமார் 60 சதிவிகிதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஒரு பனியன் உருவாக மொத்தம் 7 நிலைகளை கடந்து உருவாக வேண்டும் என்ற நிலையில், ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியே ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பின்னலாடை ஏற்றுமதிகள் இல்லாதபோது கை கொடுக்க வேண்டிய உள்நாட்டு வியாபாரம், பொருளாதாரா மந்த நிலையால் அதுவும் செயலற்ற நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். தீபாவளி நெருங்கி வருகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் பின்னலாடை நிறுவனங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிகின்றனர்.

Related Posts