பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் : நெல்லை முபாரக்

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  நாட்டின் பொருளாதாரம் இருண்ட பாழும் கிணற்றில் தள்ளப்பட்டுள்ளது என விமர்சித்தார்.

பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய முபாரக், பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருவது பொருளாதார வீழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் கூறினார்.

Related Posts