பொறியியல் படிப்பில் 52% இடங்கள் நிரப்பப்படாமல் காலி

பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஜூன் 28-ல் தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு இன்று அதிகாலை 3மணியளவில் முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்கள் சேர்க்கை விவரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் 83,396பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 முதல் 27 தேதி வரை நடந்த ஆன்லைன் கலந்தாய்வின் மூலம்76,364 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைக்கலந்தாய்வின் மூலம் 4,548 இடங்களும், சிறப்புப்பிரிவு கலந்தாய்வின் மூலம் 1,683 இடங்களும் நிரப்பட்டுள்ளன. மொத்தம்  உள்ள 1 லட்சத்து 67ஆயிரத்து 101 மொத்த இடங்களில் 83 ஆயிரத்து 396 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52சதவீத இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. பொறியியல் இடங்கள் நிரம்பாததற்கு வேலைவாய்ப்பின்மை தான் காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts