பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலிங் ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது மாறுதலுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(VO)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண்கள் கணினி மூலம் உருவாக்கப்பட்டது. பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகளுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் ஒரே கட்ஆஃப் மதிப்பெண் பெறுபவர்களுக்கு சமவாய்ப்பு அளித்து தரவரிசைப்படுத்துவதற்காக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கலந்தாய்வின் மூலம் நிரப்ப 509 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்கள் உள்ளதாக தெரிவித்தார். ஜூலை 6ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என தெரிவித்த அமைச்சர் அன்பழகன், மருத்துவ கலந்தாய்வு முடிவடையும் தேதியைப் பொறுத்து இது மாறுபட வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

Related Posts