பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல்முறையாக மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

சென்னை : மே-03

தமிழ்நாட்டில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  பொறியியல் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, 2018-2019ஆம் ஆண்டு, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annauniv. edu மற்றும் tnea.ac.in என்ற இணையதளங்களை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 42 இடங்களில் உள்ள உதவி மையங்களில் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.  இதுதொடர்பாக சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்காக செயலாளர் றைமண்ட் உத்திரியராஜ், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

Related Posts