பொறியியல்  படிப்பைத் தொடர்ந்து வேளாண் படிப்புக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல்  படிப்பைத் தொடர்ந்து வேளாண் படிப்புக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றுதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : மே-14

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் உள்ள்ள. இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும்இணைப்பு கல்லூரிகளில் 2,160இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன. தொழில்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1,262 இடங்களும்இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்பொறியியல் படிப்பை தொடர்ந்துவேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். 2500 வேளாண் படிப்பு இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும்ஜூன் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் துணை வேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Posts