பொறியியல் மாணவர்கள் திட்டமிட்டு படித்தாலே தேர்ச்சியடையலாம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் அறிவுரை

பொறியியல் மாணவர்கள் திட்டமிட்டு படித்தாலே திறமை மிக்க பொறியாளராக தேர்ச்சியடையலாம் என்று ஐடி நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருவாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.விழாவின் துவக்க நிகழ்வாக நடைபெற்ற மாணவியின் பரதநாட்டியமும்  மாணவர்களின் யோகா சாகசங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றிய சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் சஞ்சய் தீபக், பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் திட்டமிட்டு படித்தாலே திறமைமிக்க பொறியாளராக தேர்ச்சியடையலாம் என அறிவுரை வழங்கினார். இவ்விழாவில் கல்விக் குழுமங்களின் தலைவர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Posts