பொறுமையை கடைப்பிடியுங்கள் : ஐ.நா. அறிவுரை

காஷ்மீர் விவகாரத்தில் பொறுமையை கடைப்பிடியுங்கள் என இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை வழங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370ஐ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா.வில் முறையிடப்போவதாக கூறியுள்ளது.

இந்நிலையில் பொறுமையை கடைப்பிடியுங்கள் என இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரையை வழங்கியுள்ளது. இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால்தான் சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Related Posts