கோவையில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த  ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. நிதி நிறுவன அதிபரான  இவருடைய மகள் பிரகதி கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த இவர்,நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில், மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  கோவை காட்டூர் காவல்துறையினர் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டிசாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாககோமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.   இதனிடையே  ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலத்திற்கு சென்ற கோமதி என்ற பெண் சாலையோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதைகண்டு , இறங்கி சென்று பார்த்தார். அப்போது இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார். மாணவியின் பெற்றோரும் சடலத்தை பார்த்து தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறி அழுதனர். 

 மாணவி பிரகதிக்கு வரும் ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள்  நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் மாணவியின் உறவினர் சதீஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  பிரகதிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவரை கொலைசெய்திருக்கலாம் என்று  கூறப்படுகிறது

Related Posts