பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக விசாரிக்கிறது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, தொண்டாமுத்தூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதுவரை பொதுக்கூட்டங்களில் மேடைப் பிரச்சாரம் செய்து வந்த மு.க.ஸ்டாலின், இன்று முதல் முறையாக பொள்ளாச்சி தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குசேகரித்ததோடு, ஆங்காங்கே பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்..தொண்டாமுத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதாலேயே உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை எனக் கூறினார்.உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்தஸ்டாலின். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கை ஆட்சியாளருக்கு சாதகமாக சிபிசிஐடி விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்ட  மு.க.ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து தெருவில் நிறுத்தியது அதிமுக அரசு என குற்றம்சாட்டினார்.இதைத் தொடர்ந்து குனியமுத்தூரில் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனங்கள் மூலம், ஆளுங்கட்சியினரின் பணம் எடுத்துச் செல்லப்படுவதாகவும்,  அதை தடுக்கத் தேர்தல் ஆணையம் தவறினால் திமுகவினர் அந்த வேலையைச் செய்வார்கள் என்றும் எச்சரித்தார்.

Related Posts