பொள்ளாச்சி  வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும்  தண்டனை வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி 

 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

கடத்தூர், மொரப்பூர், அரூர், பாப்பி ரெட்டிபட்டி தொகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், துரோகிகளால் தான் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் மீண்டும் வந்திருப்பதாக தெரிவித்தார். துரோகிகளுக்கு பாடம் புகட்ட சரியான நேரம் என்று கூறிய அவர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரங்கள் செய்து வருதாக சாடிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்

Related Posts