போக்குவரத்து விதிமீறல்கள்களுக்கான அபராதத்தை குறைப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்

போக்குவரத்து விதிமீறல்கள்களுக்கான அபராதத்தை குறைப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரித்துள்ளார்.

மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி, சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறுவோரிடம் ஏற்கனவே இருந்ததை விட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பல  தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின்  இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டதாகவும், அரசின் வருமானத்தை பெருக்குவதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அபராதம் மூலம் கிடைக்கும்,வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை எனவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்

Related Posts