போக்குவரத்து விதி மீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை அறிமுகம்

சென்னையில் போக்குவரத்து விதி மீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறையை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை : மே-10

போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் காவல்துறையினர் பணம் வசூலிக்கும்போது ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நாள்தோறும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து காவல்துறையினர்  பணத்தை வாங்கிக்கொண்டு ரசீது கொடுப்பதில்லை என்று அபராதம் செலுத்திய வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் வசூலிக்கும் முறையை முறைப்படுத்த, டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறையை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இனி பணமில்லா பரிவர்த்தனை  முறையில் அபராதம் வாங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடமிருந்து பணமாக வாங்க கூடாது என்றும் கண்டிப்புடன் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறினார்.

Related Posts