போராட்டங்கள் எதிரொலி: சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

 

 

சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-20 

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித், மாவட்டம்தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க., மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் 1000 காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts