போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென வேண்டுகோள் 

நெல்லையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது  போடப்பட்ட வழக்குகளை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஜக்டோ ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா்

Related Posts