போராட்டம், போராட்டம் என்றால் எப்படி வளரும் பொருளாதாரம் : தமிழிசை சவுந்திரராஜன்

வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், வங்கிகள் இணைப்பால், ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக விளக்கிய பிறகும் போராட்ட அறிவிப்பு ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

போராட்டம், போராட்டம் என்றால்,  எப்படி வளரும் பொருளாதாரம் என வினவியுள்ள டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும் எனக் கேட்டுள்ளார்.

பொருளாதார சிரமங்களை சரி செய்ய வேண்டாமா? என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன், கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Posts