போர்க்கப்பல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிப்பு

 ஏமனில் மீனவர்கள் சென்ற படகின் மீது போர்க்கப்பல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

                ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியுடன் அந்நாட்டு அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள நகரங்களின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அல்-கௌகா துறைமுக பகுதியில் சவுதி கூட்டுப்படைகளின் போர்க்கப்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 17 மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், கடற்கரை நகரமான அல்-கௌகா அருகே கடலில் 18 மீனவர்களுடன் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது போர்கப்பல் ஒன்று திடீரென குண்டு வீசி நடத்தியது எனவும், இதில் ஒருவரை தவிர, 17 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த்தாகவும் தெரிவித்தனர்.

Related Posts