போர் ஒப்பந்த விதிகளை மீறிய பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் போர் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பலமுறை அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் குறிப்பாக ஹஜாப்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த்து. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது, சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவம், நவ்ஷெரா பகுதியிலும் இந்த தாக்குதலை மேற்கொண்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறு பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடியை கொடுத்த வருகின்றனர்.

 

 

 

 

Related Posts