போலி செய்திகளை தங்களுடைய தளத்தில் அனுமதிக்கமாட்டோம்

போலி செய்திகளை தங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள்உறுதியளித்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற பிரசாரம் இந்திய தேர்தலின் போதும் மேற்கொள்ளப்படுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில்  தங்களுடைய தளங்கள் மூலம் போலி செய்திகளை பரவ அனுமதிக்க மாட்டோம் என பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் கூறியுள்ளார். இது கர்நாடக தேர்தலின் போது பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தகவல்கள் மற்றும் போலியான செய்திகளை கண்டறிய பேஸ்புக், டுவிட்டர் உதவி செய்வதாக கூறியிருப்பதாகவும் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

 

Related Posts