ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது

திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் : ஜூன்-27

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார். கடந்த 25 ஆம் தேதி இவரை காணவில்லை என தகவல் வெளியான து.  இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நெடுஞ்சாலை காவல்துறையினர், சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, பணம் கேட்டு சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts