ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் : திமுக தலைவர் ஸ்டாலின்

சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் அவர் ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Posts