ப. சிதம்பரத்தை கைது செய்த்தற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த்தற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ப. சிதம்பரம் கைது விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தான் அறிகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். எனவே அவர், சட்ட ரீதியாக, நிச்சயமாக, இதை சந்திப்பார் என்று அவர் கூறினார்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். கிரிமினல் குற்றவாளியை விசாரிப்பது போல் ப.சிதம்பரத்தை விசாரிக்க கூடாது என்று கே.எஸ்.அழகிரி  கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதில் அரசியல் உள்ளது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நோக்கம் மட்டுமின்றி தனிமனித கோபம் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல என்றும் நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று  அவர் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். சட்டரீதியான பாதுகாப்புகளை மதிக்காமல் கைது செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ப.சிதம்பரம் கைது காட்டுகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

எந்த சட்ட வரையறைக்கும் உட்பட்டு  ப.சிதம்பரம் கைது செய்யப்படவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம் வெளிநாடோ அல்லது வேறு எங்கேயோ சென்று தலைமறைவாகி விடமாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts