ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் போபண்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், முன்ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாகவும், சிபிஐ உள்நோக்கத்தோடு செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா கடும் எதிரப்பு தெரிவித்தார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். வரும் 26-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

Related Posts